1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 16 ஜூன் 2021 (07:50 IST)

இனி விசில் கிடையாது, விழிப்புணர்வு பாடல்தான்; சென்னை மாநகராட்சி முடிவு!

இனி விசில் கிடையாது, விழிப்புணர்வு பாடல்தான்; சென்னை மாநகராட்சி முடிவு!
சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு தெருவிற்கு வரும் குப்பை வண்டியை ஓட்டி வரும் சுகாதார ஊழியர் விசிலடித்து குப்பை வண்டி வந்திருப்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவார். இந்த நிலையில் இனிமேல் விசில் கிடையாது என்றும் அதற்கு பதிலாக குப்பை குறித்த விழிப்புணர்வு பாடல் ஒலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சுகாதார ஊழியர் விசில் அடிப்பதால் மாஸ்க்கை கழட்ட வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அதுமட்டுமின்றி அடிக்கடி விசிலை சுத்தம் செய்ய வேண்டியிருப்பதாகவும் இதனால் சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது 
 
எனவே இனிமேல் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் குப்பை வண்டி வரும் போது குப்பை குறித்த விழிப்புணர்வு பாடல் ஒலிக்கும் என்றும் அந்த பாடல் ஒலி கேட்டவுடன் குப்பை வண்டி வந்துள்ளதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் குப்பைகளைக் கொண்டு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது, சென்னை மாநகராட்சியின் இந்த ஐடியாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது