1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 11 டிசம்பர் 2020 (11:07 IST)

சிந்து சமவெளி மக்கள் பன்றி இறைச்சி சாப்பிட்டுள்ளார்கள் - ஆய்வில் வெளியான முடிவுகள்!

சிந்து சமவெளி மக்கள் தங்கள் உணவில் பல்வேறு வகையான இறைச்சிகளை உண்டு வாழ்ந்துள்ளார்கள் என்று ஆய்வு முடிவில் வெளியாகியுள்ளது.

உலகின் தொன்மையான நாகரிகங்களுள் ஒன்றாக சிந்து சமவெளி நாகரிகம் கருதப்படுகிறது. அங்கு மக்கள் நகர்ப்புறத்தை உருவாக்கி கைவினைப் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றை மேற்கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இந்த மக்கள் பற்றி பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

ஜர்னல் ஆஃப் ஆர்க்கியாலஜிகல் சயின்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் அந்த மக்கள் எருமை, பன்றி செம்மறி ஆடு ஆகியவற்றின் இறைச்சிகளை உண்டு வாழ்ந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்கள் பயன்படுத்திய மண் பாண்டங்களில் இந்த விலங்குகளின் எச்சங்கள் மற்றும் கொழுப்புகள் படிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.