அடுத்த புயல் வரதுகுள்ள சீக்கிரம் வாங்க! – புயல் பாதிப்பை ஆய்வு செய்ய வரும் மத்திய குழு!
வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகத்தில் கரையை கடந்த நிலையில் அதன் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது.
கடந்த சில நாட்கள் முன்னர் வங்க கடலில் உருவான நிவர் புயல் காரைக்கால் அருகே கரையை கடந்த நிலையில் பல இடங்கள் புயலால் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் அடுத்ததாக உருவான புரெவி புயல் மன்னார் வளைகுடா அருகே கரையை கடக்க காத்திருக்கிறது. இதனால் தூத்துக்குடி முதல் கன்னியாக்குமரி வரை பாதிப்புகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை முதல் டிசம்பர் 8 வரை ஆய்வு மத்திய குழு ஆய்வு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு புரெவி புயல் கரை கடந்து, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியும் புயலாக மாறக்கூடும் என பேசிக் கொள்ளப்படுகிறது.