1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Sikh suicide at farmers protest

விவசாயிகள் போராட்டத்தில் சீக்கிய மதகுரு தற்கொலை: அதிர்ச்சி தகவல்!

விவசாயிகள்
விவசாயிகள் போராட்டத்தில் சீக்கிய மதகுரு தற்கொலை
மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப் அரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்து போராட்டம் செய்து வருவதால் தலைநகர் டெல்லி பெரும் பரபரப்பில் உள்ளது 
 
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகளுடன் பல கட்ட பேச்சு வார்த்தைகளை மத்திய அரசு நடத்தியும் சுமுகமான முடிவு எட்டப்படாததால் போராட்டம் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றனர் என்பதும், பாஜக அலுவலகங்களை மூடுதல், ரயில் மறியல் செய்தல் உள்ளிட்ட போராட்டத்தை அவர்கள் தொடர்வதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு தேவையான வசதிகள் கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் கலக்கத்தில் இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் சீக்கிய மதகுரு ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன் அவர்கள் எழுதிய கடிதத்தில் ’போராடும் விவசாயிகளின் அவலத்தைப் பார்த்து தன்னால் பொறுக்க முடியவில்லை’ என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
சசிகலா விடுதலை எப்போது? சிறை நிர்வாகத்துக்கு உளவுத்துறை கடிதம்!