1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 14 டிசம்பர் 2020 (13:40 IST)

டிசம்பர் 18-ம் தேதி உண்ணாவிரத போராட்டம்: முக ஸ்டாலின் அறிவிப்பு!

டிசம்பர் 18-ம் தேதி உண்ணாவிரத போராட்டம்
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் 18ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார் 
 
புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 19 நாட்களாக டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக பாஜக அலுவலகங்களை மூடும் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு கடந்த சில நாட்களாகவே ஆதரவு தெரிவித்து வரும் திமுக தற்போது அடுத்த கட்டமாக விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் 18-ஆம் தேதி திமுக தோழமை கட்சிகள் உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது
 
டெல்லியில் போராட்டம் செய்யும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்
 
ஏற்கனவே விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பாரத் பந்த்திலும் திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது