தொடர்புடைய செய்திகள்
- கமல்ஹாசன் முன்கூட்டியே பிரச்சாரம் செய்ய தொடங்கியது இதற்குத்தானா?
- திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்தவர்கள் சிறைக்குச் செல்வர் – உதயநிதி ஸ்டாலின்
- திமுகவா? கமல் கட்சியா? தமிழக கூட்டணி குறித்து ஒவைசி ஆலோசனை!
- விஜயகாந்துக்கு ஒன்னுமே தெரியாது! – திமுக பக்கம் ஜம்ப் அடித்த தேமுதிக பிரபலம்!
- சிலிண்டர் விலை உயர்வு: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை அறிக்கை!
தேமுதிகவை உடைக்க திமுக திட்டமா?
ஒவ்வொரு தேர்தலின் போதும் அதிமுக, திமுக என இரண்டு கூட்டணியிலும் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தியும் அதிக தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணியில் இணைவது தேமுதிகவின் வழக்கமாக உள்ளது
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது இரு அணிகளிலும் பேச்சுவார்த்தை நடத்தி கடைசியில் நான்கு தொகுதிகள் தந்த அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக தற்போது 40 தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
ஆனால் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே தேமுதிகவுக்கு அதிகபட்சமாக 15 தொகுதிகள் வரை மட்டுமே தர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் 15 தொகுதிகளுக்கு தேமுதிக ஒத்து வராவிட்டால் அக்கட்சியை உடைக்கவும் திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
முதல் கட்டமாக சென்னையில் உள்ள மாவட்ட நிர்வாகி ஒருவருக்கு திமுக வலை வீசியதாகவும் கிட்டத்தட்ட அந்த நபர் வலையில் சிக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது அதேபோல் தேமுதிகவில் உள்ள முக்கிய பிரமுகர்களை திமுகவுக்கு இழுக்கும் முயற்சியும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலின் போதே தேமுதிகவில் உள்ள முக்கிய பிரமுகர்கள் திமுகவால் வெளியே வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
