1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Share market down today also

மீண்டும் சரிந்த சென்செக்ஸ்: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!

பங்குச்சந்தை
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக சரிவில் இருக்கும் நிலையில் அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பங்குச் சந்தை உச்சத்தில் இருந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் பெரும் லாபம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆனால் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வருகிறது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளதை அடுத்து சற்று முன்வரை 57246 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை 120 புள்ளிகள் வரை சரிந்து 17061 என்ற நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
ஃபிளஷ் டேங்க்கில் போட்டு பெண் சிசு கொலை: தாய் கைது!