திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (12:24 IST)

ஃபிளஷ் டேங்க்கில் போட்டு பெண் சிசு கொலை: தாய் கைது!

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி கழிவறையில் சடலமாக பெண் சிசு கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் பெண் கைது. 

 
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவின் கழிவறையைச் சுத்தம் செய்ய தூய்மைப் பணியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது கழிவறை நீர்த் தொட்டியில் சில மணி நேரமே ஆன பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்துள்ளது.
 
இது குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் கபிலன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று குழந்தையின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வுசெய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
 
இந்நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி கழிவறையில் சடலமாக பெண் சிசு கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் குழந்தையைப் பெற்று ஃபிளஷ் டேங்க்கில் போட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் பூதலூரைச் சேர்ந்த பிரியதர்சினி தனது குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.