வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (18:56 IST)

மீண்டும் சரிந்தது பங்குவர்த்தம்: சென்செக்ஸ் 764 புள்ளிகள் சரிவு!

இந்த வார தொடக்கத்தில் இருந்தே பங்கு வர்த்தகம் மிக கடுமையாக சரிந்து வந்த நிலையில் நேற்று மட்டும் சற்று பங்குவர்த்தகம் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்தனர் 
 
இந்த நிலையில் இன்று மீண்டும் பங்கு வர்த்தகம் சரிந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று 764 புள்ளிகள் சரிந்து 57696 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்தது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 205 புள்ளிகள் சரிந்து 17,196 என்ற நிலையில் வர்த்தக முடிவடைந்தது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சென்சர்ஸ் 62 ஆயிரத்துக்கு மேல் இருந்த நிலையில் தற்போது 57 ஆயிரமாக குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது