புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 நவம்பர் 2021 (12:18 IST)

இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1000க்கும் மேற்பட்ட புள்ளிகள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று திடீரென 1000 புள்ளிகளுக்கும் மேல் குறைந்துள்ளது. சற்றுமுன் வரை சென்செக்ஸ் 1053 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 58572 என வர்த்தகமாகி வருகிறது என்பதும் அதேபோல் நிப்டி 310 புள்ளிகள் குறைந்து 17453 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று ஒரே நாளில் 1000 புள்ளிகள் கிட்டதட்ட குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு இன்று மிகப்பெரிய நஷ்டம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது