திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 28 அக்டோபர் 2021 (19:06 IST)

ஒரே நாளில் 1100 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் 1100 புள்ளிகளுக்கு மேல் இறங்கியதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை ஏற்றத்துடன் இருந்தாலும் இந்த வாரம் முழுவதுமே பங்கு சந்தை சரிவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் திடீரென சென்சஸ் 1100 புள்ளிகளுக்கு மேல் இறங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் நிஃப்டியின் புள்ளிகளும் படு வீழ்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
இன்றைய சென்சஸ் மற்றும் நிப்டி நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம். இன்று வர்த்தகம் முடிவின்போது சென்செக்ஸ் 1158.63 புள்ளிகள் சரிந்து 59,984.70  என்ற நிலையில் வர்த்தக முடிவடைந்தது. அதேபோல் நிப்டி 353.70 புள்ளிகள் சரிந்து 17,857.25 என்ற புள்ளியில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் வங்கிகளின் பங்குகள் படுவீழ்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.