1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 3 நவம்பர் 2021 (16:25 IST)

மீண்டும் இறங்குமுகத்தில் பங்குச்சந்தை!

கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தை படிப்படியாகக் உயர்ந்து கொண்டே வந்தது என்பதும் ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 62,000 புள்ளிகளை தாண்டியதால் பங்குசந்தையில் முதலீடு செய்தவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது பல மடங்கு லாபம் சம்பாதித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையும் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்துடன் இருந்து வருகிறது என்பதும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றும் பங்கு சந்தை சற்று இறங்குமுகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 60 புள்ளிகள் குறைந்து 17,829 புள்ளிகளில் வர்த்தகம் முடிவு அடைந்துள்ளது. அதேபோல் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 257 புள்ளிகள் சரிந்து 59,772 புள்ளிகளானது என்பது குறிப்பிடத்தக்கது.