1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Sharad Pawar, Uddhav Thackeray react on Maharashtra twist

10 அல்லது 11 எம்எல்ஏக்கள் மட்டுமே அஜித்பவாருடன் உள்ளனர்: சரத்பவார்!!

மகராஷ்டிரா
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங். கட்சிகள் ஆட்சியமைக்கத் தேவையான எம்எல்ஏக்களை பெற்றுள்ளன என சரத்பவார் தெரிவித்துள்ளார். 
 
மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சி அமைப்பது குறித்தான இழுபறி நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.  
 
முன்னதாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத கூட்டணி ஆகிய கட்சிகள் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பது குறித்தான பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. அதன் பின்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பதற்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.  
 
ஆனால் இன்று மஹாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்நாவிஸ் முதல்வராக பதவியெற்றுள்ள நிலையில், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித்பவார் பதவியேற்றுள்ளார்.  இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், காங்., தேசியவாத காங்., சிவசேனா சார்பில் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அப்போது சரத்பவார் பேசியதாவது, எங்கள் பக்கம் 156 எம்எல்ஏக்கள் உள்ளனர். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங். கட்சிகள் ஆட்சியமைக்கத் தேவையான எம்எல்ஏக்களை பெற்றுள்ளன.
 
சில சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவும் எங்களுக்கு உள்ளது. பாஜகவுக்கு ஆதரவளிக்கும் அஜித்பவாரின் முடிவு, முற்றிலும் கட்சிக்கு எதிரானது, பாஜக அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்காது. சுயேச்சை எம்எல்ஏக்களையும் சேர்த்து எங்கள் பக்கம் 170 எம்எல்ஏக்கள் உள்ளனர் 
 
பாஜகவுக்கு ஆதரவு அளித்திருப்பதன் மூலம் அஜித் பவார் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அஜித்பவாருக்கு எம்எல்ஏக்கள் யாராவது ஆதரவு அளித்தால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் நடவடிக்கை. 10 அல்லது 11 எம்எல்ஏக்கள் மட்டுமே அஜித்பவாருடன் சென்றதாக தகவல் வந்துள்ளது என சரத்பவார் தெரிவித்துள்ளார். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
சாலையில் திடீரென விழுந்த பள்ளம் – பிறகு நடந்த விபரீதம் !