மகாராஷ்டிரா மாநில முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே... அரசியலில் பரபரப்பு !
மகாராஷ்டிர மாநிலத்தி சமீபத்தில் சட்டசபை தேர்த நடைபெற்றது. அதில், பாஜக(105), சிவசேனா(56), தேசியவாத காங்கிரஸ்(54),காங்கிரஸ்(44) உள்ளிட்ட எந்தக் கட்சிகளுக்கும் பெரும்பான்மை ஏற்படாமல் தொங்கு சட்டசபையாக இருந்ததால் , மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்து பெரிதும் போட்டி எழுந்தது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, எப்படியும் சிவசேனாவிடம் சமரசம் பேசி, அவர்களின் கூட்டணியுடன் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஷை மாகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக்க வேண்டுமென திட்டம் தீட்டினர்.
ஆனால் ஆட்சியில் பங்கு வேண்டுமென சிவசேனா முரண்டு பிடிக்கவே பாஜக வெகுண்டது. பின் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியை பிடிக்க பாஜக தூண்டிப் போட்டது.ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை.
பின்னர்,சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கடிகளும் தொடர்ந்து பேச்சி வார்த்தை நடந்து வந்தநிலையில், யாரும் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என அங்கு ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சித் தலைவர்களும் சுமூகமாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அதில், மூன்று கட்சிகளும் இணைந்து செயல்பட உள்ளதாகவும், சிவசேனா கட்சித் தலைவர், உத்தவ் தாக்கரேவை முதல்வராக்க திட்டமிட்டுள்ளதாகவும், நாளை இம்மூன்று கட்சித் தலவர்களும் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
அதனால் மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.