அதிமுக - தேமுதிக இடையே ரகசிய பேச்சுவார்த்தை
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று அறிவித்தார்.
இன்று முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே பாஜக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றிபேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், அதிமுக - தேமுதிக இடையே இன்று ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகிறது.
கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகிய அதிமுக தலைவர்கள் தேமுதிக நிர்வாகிகள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதா தகவல் வெளியாகிறது.
மேலும், தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க தயக்கம் காட்டுவதால் கூட்டணியை உறுதி செய்ய தாமதம் ஆவதாகவும் 3 தொகுதிகளை ஒதுக்க அதிமுக சம்மதிப்பதாக தகவல் வெளியாகிறது.