வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 16 மார்ச் 2024 (19:49 IST)

தேர்தல் களம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது..! அண்ணாமலை..!!

Annamalai
தமிழக தேர்தல் களம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது  என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை,  இந்தத் தேர்தல் தமிழகத்தில் இருக்கும் அனைவருக்கும் சவாலான ஒன்று என்று கூறினார்.
 
பிரதமர் மோடியின் வருகையால் தமிழகத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அடுத்து கோவை, சேலத்துக்கு பிரதமர் மோடி வருகிறார், இது இன்னும் அதிக உற்சாகத்தை எங்களுக்கு தரும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முடிவு செய்யும்போது விளவங்கோடு தொகுதிக்கும் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார் என்று அண்ணாமலை கூறினார்.
 
கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் விரைவில்  கூட்டணி இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் 39 தொகுதிகளுக்கும் சேர்த்துதான் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

 
கூட்டணி கட்சிகளைவிட்டு தனியாக தொகுதிகளை அறிவிப்பது மரியாதையாக இருக்காது என்று அண்ணாமலை குறிப்பிட்டார். இந்தமுறை தமிழக தேர்தல் களம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது என கூறிய அண்ணாமலை, சவால் இருப்பது உண்மைதான் என்றும் அதையெல்லாம் எதிர்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.