வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 16 மார்ச் 2024 (17:57 IST)

நாடு முழுவதும் காலியாக உள்ள 26 சட்டப்பேரவை இடங்களுக்கும் இடைத்தேர்தல் எப்போது?

Election
நாடு முழுவதும்  காலியாக உள்ள 26 சட்டப்பேரவை இடங்களுக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
18 வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக எப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறுவதாக தலைமை  தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் இன்று அறிவித்தார்.
 
நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா ஆகிய  4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலத்திலும்; மே 13 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலத்திலும் தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் உள்ள விளவங்கோடு தொகுதிக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார்.
 
இந்த நிலையில், தமிழ் நாட்டின் விளவங்ககோடு  உள்ளிட்ட நாடு முழுவதும்  காலியாக உள்ள 26 சட்டப்பேரவை இடங்களுக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.