தொடர்புடைய செய்திகள்
- சேலை அணிந்து கொண்டு கால்பந்து விளையாடிய பெண் எம்.பி! வைரலாகும் படங்கள்
- குளித்தலை தி.மு.க. எம்.எல்.ஏ., பா.ஜ.க.வில் இணைகிறாரா? தமிழக அரசியலில் பரபரப்பு
- பெண் எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு சட்டசபை கூட்டம்: முதல்வர் அறிவிப்பு!
- ரெய்டு நடத்தியது சரிதான்.. திமுகவுக்கு சப்போர்ட்? – ஓபிஎஸ் மீது கட்சியினர் அதிருப்தி!
- விஷால் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்?... மார்க் ஆண்டனி பட தயாரிப்பாளரின் நடவடிக்கை
எஸ்.எம்.எஸ் கட்டணம் இனி வசூலிக்கப்பட மாட்டாது: எஸ்பிஐ வங்கி அறிவிப்பு!
ஒவ்வொரு வங்கியும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் கட்டணத்தை வசூல் செய்து வருகிறது என்பதும் ஒவ்வொரு வங்கியும் வசூல் செய்யும் கட்டணங்கள் வித்தியாசமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி தங்களுடைய பரிவர்த்தனைகளை தெரிந்து கொள்ளும் வகையில் அனுப்பப்படும் எஸ்எம்எஸ்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது
இதுவரை வசூலிக்கப்பட்ட எஸ்எம்எஸ் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளதை அடுத்து அதன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணமின்றி பரிவர்த்தனை செய்யலாம் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது, எஸ்பிஐ வங்கியை அடுத்து மற்ற வங்கிகளும் எஸ்எம்எஸ் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வங்கி வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
