திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 19 செப்டம்பர் 2022 (14:02 IST)

குளித்தலை தி.மு.க. எம்.எல்.ஏ., பா.ஜ.க.வில் இணைகிறாரா? தமிழக அரசியலில் பரபரப்பு

arivalayam
கரூர் மாவட்டம் குளித்தலை எம்எல்ஏ பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் கசிந்து இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை திமுக எம்எல்ஏ மாணிக்கம் என்பவர் பாஜகவில் இணைய சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையை பாஜகவினர் முடித்து விட்டதாகவும் விரைவில் அண்ணாமலை முன்னிலையில் அவர் பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்டது

ஆனால் இந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும் திமுக எம்எல்ஏக்கள் பெயர்களை களங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவதூறு பரப்பப்பட்டு வருவதாக திமுக எம்எல்ஏக்கள் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது என்றும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக தரப்பில் இருந்து கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது