புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (20:49 IST)

ராஜீவ் கொலை கைதி முருகனிடம் ஸ்மார்ட்போன்: அதிர்ச்சி தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரரசன் உள்பட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய அரசியல் கட்சிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. தமிழக அமைச்சரவை இவர்களின் விடுதலை குறித்து தீர்மானம் ஒன்றை இயற்றி கவர்னருக்கு அனுப்பி உள்ளது. 
 
இந்த நிலையில் ஒரு பக்கம் பேரறிவாளனின் தாயார் உட்பட 7 பேரின் உறவினர்கள் இந்த ஏழு பேர்களில் விடுதலைக்காக சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் 7 பேரும் எப்போதும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழ் ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர்
 
இந்த நிலையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள ராஜீவ்காந்தி கொலை கைதி முருகனின் அறையிலிருந்து ஸ்மார்ட்போன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. ஒருபக்கம் 7 பேரை விடுதலை செய்ய வெளியே சட்டப்போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் முருகனின் அறையில் இருந்து ஸ்மார்ட்போன் கைப்பற்றப்பட்டிருப்பது விடுதலைக்கான பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக கருதப்படுகிறது