1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Sanathanam will be awareness in India

இந்தியாவில் உள்ள சனாதனிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி

PM Modi
இந்தியா முழுவதில் உள்ள சனாதனிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  
 
சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு சனாதனத்துக்கு எதிராக பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில்  அவரது பேச்சு இந்தியா கூட்டணிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
 
 இந்த நிலையில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சனாதனவாதிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
 
விவேகானந்தர், லோக மானிய திலகர் ஆகியோர் அளித்த உத்வேகம் சனாதனம் என்றும் இந்தியா கூட்டணி அந்த சனாதனத்தை அழிக்க நினைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். 
 
இந்திய கலாச்சாரத்தை தாக்க ஒரு மறைமுக செயல் திட்டத்துடன் இந்தியாவில் இந்தியா கூட்டணி கட்சிகள் உள்ளன என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
3 நாட்களாக மணல் குவாரி அதிபர் அலுவலகத்தில் நடந்த சோதனை நிறைவு.. பெட்டி பெட்டியாக ஆவணங்கள்..!