திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 14 செப்டம்பர் 2023 (15:18 IST)

இனிமே ஆசியக் கோப்பையை வெல்வது ரொம்ப ஈசி… ஹர்பஜன் சிங் ஆருடம்!

நேற்று முன்தினம் நடந்து முடிந்த சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி இந்தியாவிடம் 41 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையிலேயே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.

இந்நிலையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை எளிதாக வென்றதன் மூலம் இந்திய அணியின் ஆசியக் கோப்பை கனவு எளிதாகவே நிறைவேறும் என முன்னாள் இந்திய பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக இந்திய அணி விளையாடிய அணுகுமுறையை வைத்து பார்க்கும் போது இந்திய அணி எளிதாக ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியை வென்றுவிடும் என தோன்றுகிறது.” எனக் கூறியுள்ளார்.