1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (15:06 IST)

பெரிய ஹீரோக்கள் எதுக்கு இருக்கீங்க...? கருணாஸை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்!

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு     நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவின் ஆட்டம் அதிகரித்து இருப்பதால் மக்களின் நிலைமை மோசமாகி கொண்டு வருகிறது. இதனால் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த ஏழை எளிய மக்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. சாப்பாட்டிற்கே வழியின்றி தவிக்கும் மக்களுக்கு அரசாங்கம் தேவையான உதவிகளை செய்து வருகிறது. மேலும் நிறைய அறக்கட்டளைகள் , தொண்டு நிறுவனங்கள் , பிரபலங்கள் என் அனைவரும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ்வை இழந்து தவிக்கும் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாழும் நாட்டுப்புற கலைஞர்கள், தெருக்கூத்து நடிகர்கள் உள்ளிட்ட 2000 குடும்பங்களுக்கு நடிகர் கருணாஸ் அவர்கள் உதவி செய்துள்ளார். அவர்களுக்கு  சுமார் 7000 கிலோ அரிசி, காய்கறிகள், வீட்டிற்கு தேவியான மளிகைச்சாமன்கள் உடன் ஒரு குடும்பத்திற்கு  தலா ரூ. 500 ரூபாயும் கொடுத்து வாழ்க்கை இழந்த மக்களின் வீட்டில் வெளிச்சம் ஏற்றி வைத்துள்ளார். பெரிய நடிகர்கள் சிலர் உதவ முன்பவராத நிலையில் கருணாஸ் ஒரு நடிகர் ஸ்தானத்தில் இருந்து நாடக கலைஞர்களுக்கு செய்துள்ள இந்த உதவி அவருக்கு பேரும்  புகழும் சேர்த்துள்ளது.