1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. RBI not changed repo interest rate

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா? சக்திகாந்த தாஸ் தகவல்..!

repo
அவ்வப்போது ரிசர்வ் வங்கியின் கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படும் என்பதும் இதுகுறித்து அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை அறிவிக்கும் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் சற்றுமுன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் வெளியிட்ட அறிவிப்பில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து  ஏற்கனவே செயல்பட்டு வரும் 6.5 சதவீதமாகவே ரெப்போ வட்டி விகிதம் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை ரெப்போ விகிதத்தை சுமார் 250 அடிப்படை புள்ளிகள் அதாவது 2.5 சதவீதம் வரையில் உயர்த்தியது. 2022ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பு ரெப்போ விகிதம் 4.5 சதவீதம் என்று இருந்த நிலையில் தற்போது 6.5 என உயர்ந்துள்ளது.
 
ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்ததால் ஹோம் லோன், வாகன கடன் வாங்குவோருக்கு சுமை அதிகரித்தது. இந்த நிலையில்  ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை இம்மாதம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் தொடர்ந்து 6.50 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran