வக்கீல் கமிஷனர் மற்றும் வங்கி அதிகாரிகளை கொல்ல முயற்சி
கொல்லங்கோடு :-
கொல்லங்கோடு அருகே சூழாலில் வங்கி ஏலம் விட்ட இடத்தை மீட்க வந்த வக்கீல் கமிஷனர் மற்றும் வங்கி அதிகாரிகள் உட்பட பெண்கள் மீது கொலை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லங்கோடு அருகெ சூழாலில் வங்கி ஏலம் விட்ட இடத்தை மீட்க வந்த வக்கீல் கமிஷனர் மற்றும் வங்கி அதிகாரிகள் உட்பட பெண்கள் மீது கொலை முயற்சி நடந்தது. திருவனந்தபுரம் மாவட்டம் சரோட்டுகோணத்தில் உள்ள IOB வங்கியில் பாறசாலை எஸ்என்டிபி யுனியன் செயலாளர் நிர்மலன் ரூ.40 லட்சம் கடன் வாங்கினார்.
அதை திருப்பி செலுத்தாததால் அந்த சொத்தை (28 சென்ட் நிலம் மற்றும் கட்டி முடிக்கப்படாத வீடு) ஏலம் எடுத்தது. ஏல நடவடிக்கைக்குப் பிறகு, கன்னியாகுமரி மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவர் உத்தரவின் பேரில் வந்த வழக்கறிஞர் ஆணையர் மற்றும் பெண்கள் உட்பட வங்கி அதிகாரிகளை தாக்கப்பட்டு கொல்ல முயன்றனர். அவர்கள் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கபெட்டது.
இந்த சம்பவங்களுக்கு தலைமை தாங்கிய சூழால் நிர்மலன், அவரது அன்ணன் ரகுவரன் மற்றும் அவர்களது கூட்டாளிகளை கொல்லங்கோடு போலீசார் தேடி வருகின்றனர்.p