ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 15 நவம்பர் 2023 (20:11 IST)

Bajaj Finance நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி தடை!

bajaj finance
ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கடன் வழங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாமல் இருந்ததற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்தியாவில் பிரபல நிறுவனம் பாஜாஜ். இந்த நிறுவனம் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம்  பல்வேறு வகைகளில் மக்களுக்கு  ஃபைனான்ஸ் மற்றும் கடன்களை  ஆன்லைன் வாயிலாகவும் நேரடியாகவும் கவழங்கி வருகிறது.

இந்த நிலையில் பஜாஜ்  நிறுவனம் புதிதாக கடன்கள் வழங்க தடை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின்  இ காம் மற்றும் இன்ஸ்டா இஎம்ஐ கார்டு ஆகிய இரண்டு சேவைகளின் கீழ் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கவும், கடன்கள் வழங்குவதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கடன் வழங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாமல் இருந்ததற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.