தொடர்புடைய செய்திகள்
- சகோதர, சகோதரிகளுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள்! – பிரதமர், குடியரசு தலைவர் வாழ்த்து!
- நெல்லை பள்ளியில் மாணவர்கள் மோதல் விவகாரம்: 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!
- சாலையில் சண்டைபோட்ட மாணவிகள் சஸ்பெண்ட்....கல்லூரி முதல்வர் உத்தரவு
- Farewell கொண்டாட அனுமதி மறுப்பு; வகுப்பறையை துவம்சம் செய்த மாணவர்கள்!
- அனுமன் ஜெயந்தியில் வன்முறை; பலர் காயம்! – டெல்லியில் பரபரப்பு!
ரம்ஜான் கொண்டாட்டத்தில் மோதல்; இணைய சேவை துண்டிப்பு! – ராஜஸ்தானில் அதிர்ச்சி!
ராஜஸ்தானில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இன்று நாடு முழுவதும் இஸ்லாமிய புனித பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஜலோரி கேட்டில் ரம்ஜானை கொண்டாடுவதற்காக இஸ்லாமிய கொடியை ஏற்ற சிலர் முயற்சித்துள்ளனர். ஆனால் இந்து கொடியை அகற்ற முயல்வதாக அவர்களது செயலுக்கு சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் ஒலிப்பெருக்கி அமைக்கவும் எதிர்ப்பு தெரிவித்து சிலர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். திடீரென இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதில் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை கட்டுக்குள் கொண்டு வர கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் “ஜோத்பூர் ஜலோரி கேட்டில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. எந்த விலை கொடுத்தும் அமைதி மற்றும் ஒழுங்கை பராமரிக்க நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
