வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 20 ஆகஸ்ட் 2022 (13:59 IST)

பயணிகளின் தனிப்பட்ட தரவுகள் தனியாருக்கு அளிக்கப்படாது: இரயில்வே துறை உறுதி!

reservation
பயணிகளின் தனிப்பட்ட தகவல்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது என ரயில்வே துறை உறுதி செய்துள்ளது. 
 
முன்பதிவு செய்யப்படும் பயணிகளின் தகவல்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இது குறித்து ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது
 
ஏற்கனவே உள்ள சட்டங்களுக்கு உட்பட்டு பொதுவான டேட்டாக்கள் மட்டுமே ஆய்வு செய்து பணம் திரட்டும் திட்டத்திற்கு உதவும் வகையில் தற்போதைய ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளதாகவும், தகவல் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றிய பின்னரே டேட்டாக்களை விற்று பணமாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பயணிகளின் தனிப்பட்ட தகவல்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது
 
 ரயில்வே துறையின் டிஜிட்டல் தரவுகளை விற்று ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி வந்துள்ளதை அடுத்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது