திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (17:34 IST)

கூவத்தூரில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர் செங்கோட்டையன் தான்: ஓபிஎஸ் ஆதரவாளர் திடுக் தகவல்!

sengottaiyan
கூவத்தூரில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர் முதலில் செங்கோட்டை தான் என்றும் அவர் முதல்வராக பதவி ஏற்க விரும்பவில்லை என மறுத்து விட்டதால் தான் அடுத்த கட்டமாக எடப்பாடி பழனிச்சாமி சசிகலா தேர்வு செய்தார் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் சையத்கான் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்த நிலையில் அந்த அழைப்பை எடப்பாடிபழனிசாமி மறுத்துவிட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த ஓபிஎஸ் ஆதரவாளர் சையத்கான், ‘எடப்பாடி பழனிசாமிக்கு பதவி வெறிபிடித்து உள்ளது என்றும் கூவத்தூரில் முதலில் அவர் முதல்வராக தேர்வு செய்யப்படவில்லை என்றும் செங்கோட்டையன் தான் தேர்வு செய்யப்பட்டார் என்றும் ஆனால் செங்கோட்டையன் முதல்வராக பதவி ஏற்க விரும்பவில்லை என்று கூறியதை அடுத்து அடுத்த கட்டமாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார் என்றும் கூறினார் 
 
ஆனால் முதல்வர் ஆக்கிய சசிகலாவுக்கு அவர் துரோகம் செய்தார் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.