புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (09:33 IST)

”பாஜக அரசால் நாட்டை அழிக்க மட்டுமே முடியும்”.. ராகுல் காந்தி கடும் தாக்குதல்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்த நிலை குறித்து ஆளும் பாஜக அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உரம், இரும்பு, சிமெண்ட், மின்சாரம் போன்ற துறைகளின் வளர்ச்சியில் இந்த ஆண்டு 0.2 சதவீதம் வீழ்ச்சியடைந்து இருப்பதாக ஒரு அறிக்கை வெளியானது.

இந்த பொருளாதார மந்த நிலை குறித்து எதிர்கட்சிகள் பலர் விமர்சனம் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜக-வை கடுமையாக விமர்சித்துள்ளார்.

”பாஜக அரசால் எதையும் உருவாக்க முடியாது. கடந்த பல ஆண்டுகளாக கடின உழைப்பால் உருவாக்கப்பட்டதை அழிக்க மட்டுமே முடியும்” என ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த டிவிட்டர் பதிவில், L&T நிறுவன தலைவரின் செய்தி, 3 லட்சம் ரயில்வே பணியாளர்களை விலக்கும் திட்டம், 1.98 லட்சம் BSNL-MTNL ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காதது போன்ற செய்திகளையும் பகிர்ந்துள்ளார்.