வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2019 (14:08 IST)

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் – நாடுகடத்த ஒப்புக்கொண்ட இந்தியா !

மாலத்தீவு நாட்டின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் அப்துல் கஃபூர் இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்.

மாலத்தீவு அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் தீப் அப்துல் கஃபூர்  அந்நாட்டில் இருந்து தப்பி இந்தியாவில் உள்ள தூத்துக்குடி துறைமுகத்துக்குள் நுழைய முயன்றார். அவர் வந்த படகில் மங்கோலிய நாட்டின் கொடி பொருந்திய படகில் அவருடன் இந்தோனேசியாவைச் சேர்ந்த எட்டு பேரும், இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும் இருந்தனர். அவரைப் போலிஸார் கைது செய்தனர்.

அதையடுத்து அவர் இந்திய அரசிடம் அரசியல் தஞ்சம் கோரினார். அவரது கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்ததைத்தொடர்ந்து இன்று அதிகாலையில் அவர் மாலத்தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். அகமது அதீப்புடன் அவர் இந்தியா வர உதவி செய்த ஒன்பது பேரும் மாலத்தீவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு இந்தியரும் அடங்குவார்.