வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 7 டிசம்பர் 2021 (13:08 IST)

பிரதமர் தனது தவறை உணர்ந்துவிட்டார்: பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி!

விவசாயிகளுக்கான புதிய மசோதா விவகாரத்தில் பிரதமர் தனது தவறை உணர்ந்து விட்டார் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று பாராளுமன்றத்தில் பேசி உள்ளார். 
 
வேளாண் சட்ட விவகாரத்தில் நடந்த தவறை பிரதமர் உணர்ந்து விட்டார் என்றும் அதனால்தான் அந்த மசோதாக்களை அவர் வாபஸ் பெற்று விட்டார் என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசினார் 
 
மேலும் வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்தனர் என்றும் விவசாயிகள் உயிரிழப்பு குறித்த விவரத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றும் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். மத்திய அரசு பிறப்பித்த புதிய வேளாண்மை சட்டம் சமீபத்தில் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.