வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (10:59 IST)

பீகார் கிராமத்தில் தடுப்பூசி போட்ட பிரதமர் மோடி??? – போலி பட்டியலால் அதிர்ச்சி!

பீகார் கிராமத்தில் தடுப்பூசி போட்ட பிரதமர் மோடி??? – போலி பட்டியலால் அதிர்ச்சி!
பீகாரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தியவர்கள் பட்டியல் சமர்பிக்கப்படும்போது சில பகுதிகளில் அதிகம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது போல போலியான பட்டியல் வழங்கப்படுவதாகவும் புகார்கள் உள்ளது.

இந்நிலையில் பீகாரில் உள்ள அர்வால் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் பட்டியலில் பிரதமர் மோடி, சோனியாகாந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமிதாப் பச்சன் போன்றோர் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவர்கள் பெயர் போலியாக பட்டியலில் இடம்பெற்றது குறித்து பீகார் சுகாதாரத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் இருவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.