1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 3 டிசம்பர் 2021 (07:24 IST)

இன்று புயலாக மாறுகிறது காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழை பெய்யுமா?

கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக் கடலில் தோன்றிய வளிமண்டல காற்றழுத்த தாழ்வு தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்றும் தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி வரை இந்த புயல் காரணமாக பரவலாக மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
ஜாவத் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயலால் ஆந்திரா, ஒடிசா மாநில கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் நேற்று பிரதமர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.