வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (15:15 IST)

மக்களும் பாதுகாப்பாக இல்லை, பாதுகாப்பு படையும் பாதுகாப்பாக இல்லை: ராகுல்காந்தி!

Maheஇந்த நாட்டு மக்களும் பாதுகாப்பாக இல்லை பாதுகாப்பு படையினருக்கும் பாதுகாப்பு இல்லை என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மிகவும் ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாகலாந்து மாநிலத்தில் அப்பாவி பொதுமக்களை ராணுவத்தினர் சுட்டுக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் பாராளுமன்றத்தில் இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அமளி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இதுகுறித்து ராகுல்காந்தி தனது கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானது இதயத்தை வருடுகிறது என்றும், இந்த நாட்டில் மக்களும் பாதுகாப்பாக இல்லை பாதுகாப்பு படையும் பாதுகாப்பாக இல்லை என்றும், உள்துறை என்னதான் செய்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்
 
மேலும் பயங்கரவாதிகள் என சந்தேகித்து பாதுகாப்பு படையினரால் 13 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது