1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona daily cases drop down under 50 thousand

மீண்டும் 40 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா பாதிப்பு!

India
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்திருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 43,654  பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,14,84,605 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 640 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,22,022 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,06,63,147 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 3,99,436 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பலவித மருத்துவ குணங்கள் உள்ள கிராம்பு !!