1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Puducherry Schools and colleges will not be open

பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாது - கல்வித்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

Puducherry
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
கொரோனா 2-வது அலையின் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. எனவே 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.
 
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. இதையடுத்து பள்ளிகள் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

இதற்கு பல்வேறு அரசியல் காட்சிகள் எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில் இது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு பின்னர் புதுச்சேரியில் தற்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின் பள்ளி, கல்லூரிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
About Writer
Papiksha Joseph
அடுத்த கட்டுரையில்
பூமிக்கு நெருக்கமாக வரும் சனிக்கோள்! வெறும் கண்களால் பார்க்கலாமா?