1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona cases in pondicherry increases

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா

புதுச்சேரி
புதுச்சேரியில் மேலும் 100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1,20,915 ஆக அதிகரித்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
இந்நிலையில் புதுச்சேரியில் மேலும் 100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1,20,915 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 1,795 ஆக உயர்ந்துள்ளது. 962 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
About Writer
Sugapriya Prakash