1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 16 ஜூலை 2021 (11:19 IST)

கொரோனா 3 வது அலைக்கு எச்சரிக்கையாக இருங்க... தமிழிசை!

கொரோனா 3 வது அலை வராது என்று கூற முடியாது எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

 
கொரோனா வைரஸ் வேகமாக பரவிய நிலையில் பொது இடங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்றும், பொது சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். 
 
மேலும், டெல்டா வைரஸ் 111 நாடுகளில் பரவி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் விரைவில் உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவி அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கும் என அச்சம் தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில், கொரோனா 3 வது அலை வராது என்று கூற முடியாது, அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். மேலும், தொற்றால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.