1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Puducherry MLA Salaries get increase

புதுச்சேரி எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு - நாராயணசாமி உறுதி

Puthucherry
புதுச்சேரியில் உள்ள சட்ட மன்ற கட்டிடத்தில்  நேற்று எம்.எல்.ஏக்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி  தலைமை தாங்கினார்.

 
அப்போது கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏக்கள் அனைவரும் தமிழகத்தைப் போன்று புதுசேரி எம்.எல்.ஏக்களுக்கும் சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர். அத்துடன் எம்.எல்.ஏக்களுக்கு என்று தனி வாகன ஓட்டுனர் மற்றும், உதவியாளர் நியமிக்க வேண்டும். சென்ற முறை போன்று மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று தங்கள் கோரிக்கைகளை வலுவாக முன் வைத்தனர்.
 
எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகளைக் செவிசாய்த்துக்  கேட்ட நாராயணசாமி இது தொடர்பாக குளிர்காலக் கூட்டத்தொடரில் முடிவு எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏக்களுக்கு உறுதியளித்தார். தற்போது பாண்டிச்சேரி எம்.எல்.ஏக்கள் பல்வேறு படிகளுடன் சேர்த்து ரூ.48 ஆயிரம் சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
ஒரு நாயால் 50 ஆண்டு சிறை தண்டனையிலிருந்து தப்பித்த ஓரினச் சேர்க்கையாளர்