தொடர்புடைய செய்திகள்
- சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை: அரசின் இழப்பீடு எவ்வளவு? 10 முக்கிய தகவல்கள்
- 8 வழி சாலை திட்டம்; விவசாயிகளை சந்தித்த சீமான் கைது!
- ரஜினிக்கு 8 வழிச்சாலை குறித்து என்ன தெரியும்? அன்புமணி ராமதாஸ்
- 8 வழிச்சாலை தேவை தான்... ஆனால்? என்ன சொல்கிறார் ரஜினிகாந்த்
- பசுமை சாலை திட்டம்: ''விவசாயிகளை விவசாய கூலிகளாக மாற்றுகின்றனர்''
சென்னை-சேலம் 8 வழிச்சாலை 6 வழிச்சாலையாக மாற்றம்
சென்னை - சேலம் இடையேயான பசுமைவழிச்சாலை திட்டத்தின்கீழ் 8 வழிச்சாலைக்கு பதிலாக 6 வழிச்சாலைகள் மட்டுமே போடப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதை அடுத்து 8 வழிச்சாலை திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்துள்ளது.
இதன்படி சென்னை - சேலம் இடையே தற்போது 6 வழிச்சாலையே அமைக்கப்பட உள்ளதாகவும், தேவைப்பட்டால் எதிர்காலத்தில் அந்த சாலை 8 வழிச்சாலையாக மேம்படுத்தப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
வனப்பகுதி வழியே 13 கிலோ மீட்டருக்குப் பதில் 9 கிலோ மீட்டர் தொலைவுக்கு பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் என்றும், 300 ஏக்கருக்கு பதில் 103 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த திட்டத்திற்கான எதிர்ப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த மாற்றத்தினால் 8 வழிச்சாலைக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த 6 வழிச்சாலைக்கு சுமார் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
