1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Priyanka Gandhi thought about Hijab issues

பெண்கள் எந்த உடை அணியவும் சுதந்திரம் உண்டு! – பிரியங்கா காந்தி கருத்து!

National
ஜிஹாப் சர்ச்சை குறித்து பேசியுள்ள காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி பெண்கள் விரும்பிய உடை அணிய அவர்களுக்கு உரிமை உண்டு என தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு பெண்கள் ஹிஜாப் அணிந்து செல்வதற்கான தடை மற்றும் அதை தொடர்ந்த போராட்டங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அதை தொடர்ந்து ஹிஜாப் தடையை நீக்குவதை எதிர்த்து இந்து மாணவ அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியதால் இரு பிரிவினர் இடையே மோதல் எழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி “பெண்கள் ஹிஜாப், ஜீன்ஸ், கூன்ஹாட் என எதை அணிவது என்பது குறித்து முடிவெடுக்க பெண்களுக்கு உரிமை உண்டு. இந்திய அரசியலமைப்பு அந்த உரிமையை பாதுகாக்கிறது. பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அண்ணாமலையே நீட் வேண்டாம் என சொன்னவர் தான்... மா.சுப்பிரமணியன் பேட்டி!