திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (18:40 IST)

மக்களவையில் ஒலித்த ஹிஜாப் விவகாரம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் மற்றும் காவி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் மக்களவையில் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பிரிவினர் ஹிஜாப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் இன்னொரு பிரிவினர் காவிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் அம்மாநிலத்தில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது
 
இதன் காரணமாக மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் ஹிஜாப் விவகாரத்தை எழுப்பி மக்களவையில் இருந்து காங்கிரஸ் திமுக சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர் 
 
மக்களவை கூடியதும் ஹிஜாப் விவகாரத்தை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பி மத்திய அரசு இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததால் மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த பரபரப்பில் நடுவே எதிர்க் கட்சி எம்பிக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.