1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Prakash Raj supports Arvind Kejriwal

நாட்டின் மிக உயர்ந்த தலைவரே... பிரகாஷ் ராஜ் நக்கல் டிவிட்!

பிரகாஷ் ராஜ்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஒரு வாரமாக துணை நிலை ஆளுனர் இல்லத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 
 
டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கோரி கடந்த 7 நாட்களாக முதல்வர் கேஜ்ரிவால், அமைச்சர்கள் மணீஷ் ஷிசோடியா, கோபால் ராய், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் துணை நிலை ஆளுநர் இல்லத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இவருடைய போராட்டத்திற்கு பாஜக அல்லாத முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். தற்போது கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் பிரகாஷ் ராஜ் மோடியை டிவிட்டரில் நக்கல் செய்துள்ளார்.
 
அந்த நாட்டின் மிக உயர்ந்த தலைவரே. நீங்கள் உடற்தகுதி சவாலிலும், யோகா, உடற்பயிற்சி செய்வதிலும் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். எங்களுக்காக ஒரு நிமிடம் ஒதுக்குங்கள், ஆழ்ந்து மூச்சு இழுத்துவிட்டுக்கொள்ளுங்கள். உங்களை சுற்றி பார்த்துக்கொள்ளுங்கள்.
 
உங்களின் அதிகாரிகளிடம் கூறி, ஐஏஎஸ் அதிகாரிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் இணைந்து பணியாற்றக் கூறுங்கள். இதை படித்தபின் உங்களின் உடற்பயிற்சியையும், வேலையையும் கூட செய்யலாம் என்று பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார். 
அடுத்த கட்டுரையில்
டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடங்கியது லாரி ஸ்டிரைக்