திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 18 ஜூன் 2018 (18:31 IST)

டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடங்கியது லாரி ஸ்டிரைக்

டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்றுமுதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது.

 
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது.
 
குறிப்பாக சரக்கு லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த மாதம் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. இருந்தாலும் இந்த விலை குறைப்பு யாருக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை.
 
டீசல் விலையை 3 மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும் மற்றும் சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
 
அதன்படி இன்றுமுதல் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியது. தமிழ்நாடு லாரி உரிமையாளட்கள் சம்மேளனம், தமிழ்நாடு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிடவை இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர். 
 
மேலும், இதன்காரணமாக காய்கறி விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.