திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 17 ஜூன் 2018 (16:51 IST)

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு 420 - சுப்பிரமணிய சுவாமியின் சர்ச்சைப்பேச்சு

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அர்விந்த் கெஜ்ரிவால் ஒரு 420 என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி குற்றம் சாட்டியுள்ளார். 
டெல்லியில் நடைபெற்றுவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்திற்கு துணைநிலை ஆளுநா் தான் காரணம் என்றும், எனவே அவா் இந்த விவகாரத்திற்கு தீா்வு காண வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்து
 
முதல்வா் அரவிந்த் கெஜரிவால், துணைமுதல்வா் மணிஸ் சிசோடியா, மூத்த அமைச்சா்கள் சத்யேந்திர ஜெயின், கோபால் ராஜ் ஆகியோர் கடந்த 7 நாட்களாக துணைநிலை ஆளுநா் அலுவலக வரவேற்பறையில் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பிரனாய் விஜயன் மற்றூம் கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோர் அரவிந்த கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க கவர்னர் மாளிகையிடம் அனுமதி கேட்டனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால், நேற்று மாலை அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்ற அவர்கள், அவரது மனைவியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி  அரவிந்த் கெஜரிவால் ஒரு நக்சலைட். அவர் ஒரு 420 எனெ கீழ்த்தரமாக பேசியுள்ளார். மேலும் இப்பேர்பட்டவருக்கு ஏன் நான்கு மாநில முதல்வர்களும் ஆதரவளிக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.