1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. PM Modi visit telungana, chandhra sekararao decision

பிரதமரை வரவேற்க அமைச்சரை அனுப்பும் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்!

தெலுங்கானா
நாளை பிரதமர் மோடி ஹைதராபாத் வர இருக்கும் நிலையில் அவரை வரவேற்க தனது அமைச்சரை முதலமைச்சர் சந்திரசேகரராவ் அனுப்ப உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாளை பிரதமர் மோடி ஹைதராபாத் வருகிறார். ஒரு மாநிலத்திற்கு பிரதமர் வருகை தரும்போது அம்மாநில முதல்வர் வரவேற்பு அளிக்க வேண்டும் என்பது விதியாக இருக்கும் நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் நேரில் சென்று வரவேற்காமல் தனது சார்பில் அமைச்சர் ஒருவரை அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடியையும் பாஜகவையும் தூக்கி கடலில் போட வேண்டும் என காட்டமாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்?