திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 2 பிப்ரவரி 2022 (22:42 IST)

பிரதமர் மோடியை நேரில் சந்திக்க விரும்பும் ஒரு ரூபாய் இட்லி பாட்டி!

பிரதமர் மோடியை நேரில் சந்திக்க விரும்பும் ஒரு ரூபாய் இட்லி பாட்டி!
ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்துவரும் கமலாத்தாள் பாட்டி பிரதமர் மோடியை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார் 
 
கோவை பகுதியில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்துவரும் கமலாத்தாள் பாட்டியின் சேவையைப் பாராட்டி பல அரசியல்வாதிகள் அவருக்கு உதவி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் அவருக்கு இரண்டு கேஸ் சிலிண்டர்கள் மாதந்தோறும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் தனக்கு உதவி செய்த பிரதமர் மோடியை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் இல்லையெனில் பிரதமர் தன்னுடைய வீட்டிற்கு வந்து இட்லி சாப்பிட்டு செல்ல வேண்டும் என்றும் கமலாத்தாள் பாட்டி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்