தொடர்புடைய செய்திகள்
- தேர்தல் வருவதால் கொரோனா பாதிப்பு குறைத்து காண்பிக்கப்படுகிறதா?
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 1,650 பறக்கும் படைகள்: தேர்தல் ஆணையம்!
- தொடர் பிரச்சாரம் செய்யும் கமல்ஹாசன்
- உடைந்ததா கூட்டணி? தனித்து களமிறங்கிய பாஜக – அண்ணாமலை திடீர் அறிவிப்பு!
- பட்ஜெட் 2022 - தேர்தல் பட்ஜெட்டாக இருக்குமா? யாருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?
கனவு கண்ட அகிலேஷ் யாதவை கிண்டலடித்த பிரதமர் மோடி!
தன்னுடைய கனவில் கிருஷ்ணர் வந்ததாகவும் உத்தரபிரதேசத்தில் தன்னுடைய தலைமையிலான ஆட்சி தான் நடக்கும் என்று கனவில் கூறியதாகவும் கூறிய அகிலேஷ் யாதவை பிரதமர் மோடி கிண்டலடித்து பேசியுள்ளார்
நேற்று பிரதமர் மோடி காணொலி மூலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது சிலர் கடவுளே நேரில் வந்து கூறியதாக கனவு காண்கின்றனர் தூக்கம் வருபவர்களுக்கு மட்டும் தான் கனவு வரும். தூங்காமல் விழித்துக் கொண்டு உழைப்பவர்களுக்கு கனவு எப்படி வரும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அகிலேஷ் யாதவ் தன்னுடைய கனவில் கிருஷ்ணர் வந்ததாகவும் உத்தரபிரதேசத்தில் தன்னுடைய கட்சியின் ஆட்சிதான் நடக்கும் என்றும் கூறிய்தற்கு பதிலடியாக பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இந்த வளர்ச்சித் திட்டங்கள் தொடர வேண்டுமானால் பாஜக வுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
அடுத்த கட்டுரையில்
