1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 2 பிப்ரவரி 2022 (09:10 IST)

பாஜகவை தூக்கி கடலில் எறிய வேண்டும்: தெலுங்கானா முதல்வர்!

பாஜகவை தூக்கி வங்கக்கடலில் எறிய வேண்டும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் ஆவேசமாக விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில மாதங்களாகவே பிரதமர் மோடியையும் பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருபவர்களில் ஒருவர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நேற்றைய பட்ஜெட்டிற்கு பின்னர் பாஜக குறித்து பேசிய முதல்வர் சந்திரசேகரராவ் நாட்டில் இருந்தும், அதிகாரத்தில் இருந்தும் பாஜக அகற்றப்பட்டு வங்கக் கடலில் தூக்கி எறிய வேண்டும் என்றும் அவர்கள் என்ன செய்தாலும் அமைதியாக உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும் நாட்டுக்கு எது நல்லதோ எது தேவையோ அதை கண்டிப்பாக செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்
 
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களின் இந்த விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது